தமிழர் வரலாற்றில் மே 18 என்பது மக்களினால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வலிகளை ஏற்படுத்தி தந்த ஒரு நாளாகும்.
இதனடிப்படையில், அன்று பறிபோன உயிர்களுக்காக தமிழர் தாயங்கள் உட்பட சர்வதேச அளவில் நேற்றைய தினம் (18) நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கிலும், கனடா, பிரித்தானியா போன்ற இடங்களிலும் தம் உறவுகளை இழந்த அனைத்து மக்களும் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தி இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் (India) நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கூட்டங்களும் இடம்பெற்றது அத்தோடு இந்திய அரசியல் தலைமைகளும் தமது அஞ்சலிகளை பகிர்ந்து இருந்தனர்.
இதனுடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் ஐபிசி தமிழுடன் இந்திய மக்கள் பகிர்ந்து கொண்ட விரிவான கருத்துக்களை சுமந்து வருகின்றது கீழ்வரும் காணொளி,
https://www.youtube.com/embed/QcSIewlU0pk
