Home இலங்கை சமூகம் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

0

திருகோணமலை- தம்பலகாமம் கள்ளிமேட்டு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி
இன்று (18) காலை வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை அப்பகுதி இளைஞர்கள் பொது மக்கள்
இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த
மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும்
நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வலையொலியாக
மாறியுள்ளன.

நினைவேந்தல் நிகழ்வுகள் 

இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு
கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.

மே மாதம் 12 தொடக்கம் 18 வரை முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட
நிலையில் வடகிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் இன்றைய தினம் (18) விசேடமாக
நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றன.

இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலைகளுக்கான நீதியை தற்போது நினைவேந்தலில்
மக்கள் மனவேதனையுடன் வேண்டி நிற்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version