Home இலங்கை அரசியல் பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

0

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10.10.2024) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரி

கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) சட்ட பட்டதாரியான அவர் 1985 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்தார்.

1997ம் ஆண்டு அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014ம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுப் பெற்றார்.

பதில் பிரதம நீதியரசரான முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ மொரட்டுவை கல்லூரியின் பழைய மாணவியாவார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://ibctamil.com/article/murdhu-fernando-appointed-acting-chief-justice-1728543365

NO COMMENTS

Exit mobile version