Home சினிமா பரிசு தொகையை இதற்கு தான் செலவு செய்வேன்.. மேடையிலேயே கூறிய பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன்

பரிசு தொகையை இதற்கு தான் செலவு செய்வேன்.. மேடையிலேயே கூறிய பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன்

0

பிக் பாஸ் 8ம் சீசன் இன்று நிறைவு பெற்றது. எதிர்பார்ததை போல முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என விஜய் சேதுபதி அறிவித்தார்.

இரண்டாம் இடம் பிடித்த சௌந்தர்யாவும் முத்து தான் டைட்டில் பெற தகுதியானவர் என அதன் பின் கூறினார். “ஒருவேளை என் கையை நீங்கள் தூக்கி இருந்தால் என் அப்பாவே வந்து கோப்பையை பிடிங்கி முத்துகுமரனிடம் கொடுத்து இருப்பார்” என கூறினார் சௌந்தர்யா.

பரிசு தொகை

முத்துக்குமரனுக்கு பரிசாக 40 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த பரிசு தொகையை என்ன செய்ய போகிறேன் என்றும் முத்து மேடையிலேயே கூறிவிட்டார்.

அவர் குடும்பம் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும், கடன் இல்லாமல் அந்த வீட்டை கட்ட இந்த பரிசு தொகையை பயன்படுத்துவேன் என முத்துக்குமரன் கூறினார். மேலும் சமூகத்திற்காகவும் சில விஷயங்கள் செய்யப்போவதாக அவர் கூறினார். 

NO COMMENTS

Exit mobile version