Home இலங்கை கல்வி மற்றுமொரு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

மற்றுமொரு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

0

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில்(eastern province) உள்ள பாடசாலைகளுக்கு நாளை முதல் ஆறு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் மற்றுமொரு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமத்திய மாகாணத்தில்(north central province) உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவணைப்பரீட்சைகள் ஒத்திவைப்பு

வடமத்திய மாகாண பிரதான அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடாசலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்குவதாக அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் (21) நடைபெறவிருந்த 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான 2024ம் ஆண்டுக்கான இறுதித் தவணைப் பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version