Home அமெரிக்கா அமெரிக்காவில் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மர்மத்தூண்

அமெரிக்காவில் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மர்மத்தூண்

0

அமெரிக்காவின்(United States) லாஸ் வேகாஸ் பாலைவனம் அருகே மர்மமான ஒற்றைக்கல் தூண் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த தூணை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் 

ஆனால் அந்த மர்மத்தூணானது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவம் கிடைக்கவில்லை என் பொலிஸார்  கூறியுள்ளனர்.

மேலும், சமூக ஊடகப்பயனர்கள் இந்த மர்மத்திற்கு விளக்கம் காண வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளனர்.

2020இல் இருந்தே உலகின் பல பகுதிகளில் இதுபோன்ற மர்மத்தூண் திடீரென்று காணப்பட்டு வருகிறது. 2020 நவம்பர் மாதம் 12 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று உட்டாவில் உள்ள பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய பகுதியானது மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால், பொலிஸார் பொதுமக்கள் நலன் கருதி அந்த மர்மத்தூண் காணப்பட்ட பகுதியை வெளியிட மறுத்தனர்.

அதைத் தொடர்ந்து ருமேனியா, மத்திய கலிபோர்னியா ஆகிய பகுதிகளிலும் மர்மத்தூண் திடீரென்று தோன்றியது. தற்போது லாஸ் வேகாஸ் பாலைவனம் அருகே காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 அடி உயரம் கொண்ட மர்மத்தூண் ஒன்று தென்கிழக்கு வேல்ஸில் ஒரு மலைப்பகுதியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version