Home முக்கியச் செய்திகள் தேர்தல் : அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச

தேர்தல் : அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச

0

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் பொருந்தாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் இடம்பெற்ற கூட்டத்தின் இறுதியில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தலை ஒத்திவைக்க கூடாது

மக்களின் விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும், அவர்களின் குரலை தாமதப்படுத்துவதன் மூலம் அல்ல என அவர் குறிப்பிட்டார்.

அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குத் தீங்கானது.

மகிந்த தேர்தலை ஒத்திவைக்கவில்லை

மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) ஆட்சியில் இருந்தபோது உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல்கள் ஒத்திவைக்கப்படவில்லை.

ஒரு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை என்பது மக்களின் விருப்பத்தினாலேயே ஏற்பட வேண்டுமே தவிர அவர்களின் குரல்களை தாமதிப்பதன் மூலம் அல்ல என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version