நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தின் அங்கமாக கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (26) முற்பகல் 11 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
கல்வி செயற்பாடுகள் பாதிப்பு
அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் தவணை ஆரம்பமான நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையானது மாணவர்களின் கல்வி நிலைக்கு பின்னடைவாக அமையும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், சில பாடசாலைகளில் இன்றைய தினம் ஆசிரியர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்ததாக கல்வித் திணைக்களத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளது.