Home இலங்கை அரசியல் அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள பலிகொடுக்கப்படும் அதிகாரிகள்! நாமல் விமர்சனம்

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள பலிகொடுக்கப்படும் அதிகாரிகள்! நாமல் விமர்சனம்

0

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள அதிகாரிகள் பலிகொடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksha) விமர்சித்துள்ளார்.

கொழும்பு , தொட்டலங்க பிரதேசத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 நாமல் விமர்சனம்

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த அரசாங்கம் எந்தவொரு விடயத்தையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாத அரசாங்கமாகும்.

ஆனால் அவர்களின் தவறுகளையும் இயலாமையையும் மறைத்துக் கொள்ள அதிகாரிகள் மீது பழிபோடுகின்றனர்.

உண்மையில் இது கவலைக்குரிய விடயமாகும் என்றும் நாமல் ராஜபக்‌ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version