Home இலங்கை அரசியல் ஏனைய கட்சிகள் மீதான வெறுப்பினால் நாம் தேர்தலில் வென்றோம்

ஏனைய கட்சிகள் மீதான வெறுப்பினால் நாம் தேர்தலில் வென்றோம்

0

 ஏனைய அரசியல் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்பினால் தமது கட்சி தேர்தலில் வென்றது என ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ரீ.பி சரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பழைய இரண்டு கட்சிகள் மீதும் மக்கள் அதிருப்தியையும் வெறுப்பினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது என அவர் மக்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சி சிறந்தது என்பதற்காக வாக்களிக்கப்படவில்லை எனவும் ஏனைய கட்சிகள் மீதான குரோதமே எமது கட்சிக்கான ஆதரவாக மாறியது என பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version