ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொள்கின்றார்.
நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில் இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார்.
செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் இலங்கையின் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத நீளமான வாக்குசீட்டினை எதிர்கொள்கின்றனர்.
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர்
இந்த வாக்குசீட்டில் இரண்டு நாமல்கள் காணப்படுவது வாக்குசீட்டினை குழப்பம் மிகுந்ததாக மாற்றியுள்ளது.ஆகக்குறைந்தது நாமல் ராஜபக்ச விசுவாசிகளுக்காவது ஒரே பெயருடைய வேட்பாளர்களை நிறுத்துவது என்பது கடந்த காலங்களில் ராஜபக்சக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம்.
2015 இல் அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களை குழப்புவதற்காக ராஜபக்சக்கள் சிறிசேன என்பவரை நிறுத்தினர் .
மைத்திரிபால சிறிசேன போன்ற தோற்றமுடையவராக அவர் காணப்பட்டார்.
இந்த ஏமாற்று வேலையால் பலர் ஏமாறாத போதிலும் ராஜபக்சக்கள் நிறுத்திய ஏ.ஆர் சிறிசேன 18174 வாக்குகளை பெற்றார்.
தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ள மற்றைய நாமல் வாக்குகளை சிதறடிப்பதில் பெயர் பெற்றவர்.
அவரது பெயரை சிங்களத்தில் எழுதினால் அது ராஜபக்சக்களின் வாரிசின் பெயரை ஒத்ததாக காணப்படும்.
அதிக வாக்குகள்
எனினும் ஆங்கிலத்தில் எச் என்ற எழுத்து மேலதிகமாக காணப்படுவது ஒருசிலரின் பார்வைக்கே அகப்படும்.
2015 இல் இந்த நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் வாக்குகளை சிதறடிக்க முயன்றார்.போலி சிறிசேனவிற்கு அடுத்ததாக நான்காவதாக வந்ததுடன் 14000 வாக்குகளையும் பெற்றார்.
எனினும் 2019 தேர்தலில் அவரால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அதிக வாக்குகளை பெற முடியவில்லை.
2015 இல் நாமல் ராஜபக்சவின் சின்னம் சுமார் முப்பது நாற்பது வருடங்களிற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி சின்னம். தற்போது அது ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம்.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் சின்னம் தபாலுறை.
ஒருகாலத்தில் ஏகபோக கட்சியாக காணப்பட்ட தனது கட்சிக்குள் காணப்படும் கருத்து வேறுபாடுகளை எதிர்த்து போராடவேண்டிய நிலையில் உள்ள நாமல் ராஜபக்ச தவறாக வழிநடத்துதல் , ஏமாற்றுதல், குழப்பம் போன்றவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் உள்ளார்.