Home இலங்கை அரசியல் வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து அதிருப்தியடைந்துள்ள நாமல்

வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து அதிருப்தியடைந்துள்ள நாமல்

0

Courtesy: Sivaa Mayuri

வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் ஒன்று அண்மையில் அகற்றப்பட்டமை குறித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், குடிமக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பதில் பிரச்சினை இல்லை. எனினும், இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பில் சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு

30 வருடகால பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை போராடியது.
எனினும் இன்று அனைத்து சமூகங்களும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திரத்தை அனுபவிக்கின்றன என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும், தேசிய பாதுகாப்பைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version