Home இலங்கை அரசியல் சுமந்திரனை ஓடோடிச் சென்று சந்தித்த நாமல்

சுமந்திரனை ஓடோடிச் சென்று சந்தித்த நாமல்

0

 இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரனை இன்றையதினம் சந்தித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது,

NPP அரசாங்கத்திற்கு எதிராகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த 21வது பொதுப் பேரணி குறித்து சுமந்திரனுக்கு விளக்கமளிக்க இந்த சந்திப்பு நடைபெற்றது.

 ITAK இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக, நிகழ்ச்சி நிரல் மற்றும் நாங்கள் எழுப்பும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவது எங்களது கடமையாகும்.

தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம். உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்த இந்தத் தேர்தல்கள் அவசியம். மேலும் அவை அரசியலமைப்பின்படி நடைபெறுவது மிக முக்கியம் என பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் பங்கேற்றிருந்தார்.


you may like this


https://www.youtube.com/embed/p5pPZNIjM7Y

NO COMMENTS

Exit mobile version