Home இலங்கை அரசியல் நாமல் மீதான கைது உத்தரவு! கட்டுநாயக்க வழியாக உடனடியாக நாடு திரும்பினார்..

நாமல் மீதான கைது உத்தரவு! கட்டுநாயக்க வழியாக உடனடியாக நாடு திரும்பினார்..

0

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு நேற்றையதினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

மாலைதீவுக்கு பயணம் 

இதேவேளை, நேற்றையதினம் அவர் மாலைதீவிற்கு நிகழ்வொன்றில்  கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த  நிலையில் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்குச் சென்ற அதே விமானத்தில் நேற்று காலை நாமல் ராஜபக்சவும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு  ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான போராட்டம் ஒன்றின் போது முறைகேடாக நடந்து கொண்டமை தொடர்பாக  நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

எனினும், குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ச முன்னிலையாகாமையின் காரணமாக அவரை கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version