Home முக்கியச் செய்திகள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்

0

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு (Elephant pass salt) என
மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு (Raja Salt) என
பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம்

அத்துடன் குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு
மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது.

இதேவேளை வடபகுதியில் அமைந்துள்ள ஆனையிறவு உப்பளமானது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டபோது ரஜ உப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version