இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை (Sri Lanka) விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar ) நாளைய தினம் (20) இலங்கை வரவுள்ள நிலையில் இந்தியாவில் (India) கூட்டணி அரசாங்கம் மீண்டும் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கை வரும் அவர் இலங்கையில் பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் கூட்டணி
இந்த வருடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகின்றமை குறித்து இந்த சந்திப்புகளில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.