தொடரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடை உத்தரவுகளை நேபாள இராணுவம் விதித்துள்ளது.
மக்கள் தொடர்பு மற்றும் தகவல் இயக்குநரகம் இன்று (10.09.2025) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேபாளத்தின் காத்மாண்டு, போகாரா, புட்வால், பைரஹாவா பரத்பூர், இட்டாஹரி மற்றும் டமாக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேபாள ஜென் சி (Gen Z) எனப்படும் தலைமுறையினரின் தொடர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கலவரமாக வெடித்துள்ளதுடன் அந்நாட்டு தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
இந்த நிலையில், நேபாளத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு 10 மணி முதல் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் தடை உத்தரவுகள் மாலை 5:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், அதன் பிறகு, நாளை (வியாழக்கிழமை, செப்டம்பர் 11) காலை 6:00 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
எதிர்காலத்தில் பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
