Home இலங்கை அரசியல் தமிழரசிலேயே அரசியல் பயணம் தொடரும்…ஆணித்தரமாக கூறிய சிறீதரன்

தமிழரசிலேயே அரசியல் பயணம் தொடரும்…ஆணித்தரமாக கூறிய சிறீதரன்

0

எந்த சூழ்நிலையிலும் தமிழரசுக் கட்சியை விட்டு தான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வட்டுக்கோட்டைத் தொகுதியில் நேற்றையதினம் (27) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியற் பயணத்தை தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும்.

கட்சி தலைவர் விவகாரம்

பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, கட்சி ரீதியாகவும், தனிநபராகவும் என்னை ஆத்மார்த்தமாக நேசிக்கும் மக்களின் நியாயபூர்வமான கேள்விகள் உட்கட்சி முரண்நிலைகள் குறித்தே அமைந்திருக்கின்றன.

கட்சிக்கு எதிராகவும் தெரிவுசெய்யப்பட்ட தலைவராக நான் செயற்படமுடியாதவாறும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பலர், கட்சியைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்ற கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

அதேவேளை, என்னை கட்சியைவிட்டு வெளியேற்றும் கைங்கரியங்கள் முன்னெடுக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறுகிறார்கள்.

அரசியற்பயணம் 

என்னையும், எனது தலைமைத்துவத்தையும் நேசிக்கின்ற – விசுவாசிக்கின்ற எனது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை.

என்மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.

தடைகள் அனைத்தையும் தாண்டி, எமது மக்கள் விரும்புகின்ற, அவர்களது மனதறிந்த மக்கள் பிரதிநிதியாக எனது அரசியற்பயணம் தமிழரசுக் கட்சியிலேயே தொடரும் என்பதை, தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டையில் வைத்து உறுதியோடு உரைக்கிறேன்” என்றார்.

 

NO COMMENTS

Exit mobile version