Home இலங்கை அரசியல் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

0

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க (Najith Hindika)  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை (Hambantota) ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

அமைச்சரவை செயலாளர்

இவர் கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு அரச மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

வைத்தியர் நஜித் இந்திக்க தனது மருத்துவ வாழ்க்கைக்கு மேலதிகமாக ஒரு அரசியல் செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

மேலும் நேற்றையதினம் (24) புதிய பிரதமர் உட்பட அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் 15 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

Source: https://ibctamil.com/article/new-director-general-for-presidential-media-unit-1727225663

NO COMMENTS

Exit mobile version