Home உலகம் கனடாவில் விலைவாசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி

கனடாவில் விலைவாசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி

0

கனடாவில் (Canada) தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க பிரபல நிறுவனமொன்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான Loblaw இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன் படி, No Name stores என அழைக்கப்படும் இந்த கடைகளில் முதல் மூன்று கடைகள், எதிர்வரும் மாதம், Windsor, St. Catharines மற்றும் Brockville ஆகிய இடங்களில் திறக்கப்பட உள்ளன.

20 வீதம் தள்ளுபடி

குறித்த கடைகள் காலை 10.00 மணி முதல், மாலை 7.00 மணி வரைதான் இயங்குவதுடன், 1,300 வகையான பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை, மற்ற கடைகளில் கிடைக்கும் பொருட்களைவிட, இங்கு கிடைக்கும் பொருட்கள், 20 வீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் என்பது சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், விலைவாசியால் உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இச்செய்தி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/new-discount-grocery-stores-in-canada-1724534317

NO COMMENTS

Exit mobile version