Home முக்கியச் செய்திகள் இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய கடவுச்சீட்டு!

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய கடவுச்சீட்டு!

0

இலங்கையில் (Sri Lanka), அடுத்த வருடம் முதல் மின்னணு கடவுச்சீட்டு (E- Passport) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration & Emigration) இன்று (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் இந்த மின்னணு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.

புதிய முறை

அதன்படி, கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்யப்பட வேண்டும்.

இனையமுறையில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version