Home உலகம் ஆப்கானிஸ்தானில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

ஆப்கானிஸ்தானில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

0

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) நேற்று (16) மாலை பெய்த கனமழையால் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 230 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, காயமடைந்தவர்கள் நங்கர்ஹார் பிராந்திய மருத்துவமனை மற்றும் பாத்திமா-துல்-சஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இயற்கை பேரிடர்களுக்கு முகங்கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version