Home இலங்கை அரசியல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக புதிய நியமனம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக புதிய நியமனம்

0

Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளி கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளாராக கே.குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்றையதினம் (11.12.2024) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர குணநாதனுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்துள்ளார்.

பல உயர் பதவிகள்

முன்னாள் குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என பல உயர் பதவிகளை கே.குணநாதன் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version