Home இலங்கை பொருளாதாரம் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல! அரசியல் ஆய்வாளரின் கருத்து

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல! அரசியல் ஆய்வாளரின் கருத்து

0

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல என அரசியல் ஆய்வாளரும்,
சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள வாராந்த அரசியல்
ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கட்டுரையில்,

எதிர்க்கட்சி அரசியலும், ஆளும் கட்சி அரசியலும் ஒன்றல்ல. எதிர்க்கட்சியில்
இருக்கும் போது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடங்களில் கூட வாக்குறுதிகளை
அள்ளி வழங்கலாம். ஆளும் கட்சியாக வந்தபின் அதனை நடைமுறைப்படுத்துவதில் திணற
வேண்டி வரும்.

கடந்த கால கோசங்கள்

அநுர அரசாங்கத்திற்கும் அந்த நிலையே வந்துள்ளது. தேர்தல்
பிரச்சாரத்தின் போது முறைமை மாற்றம் என்பதையே பிரதானமான கோசமாக தேசிய மக்கள்
சக்தி முன்வைத்தது.

இன்று அந்தப் பாதையில் ஒரு அடியை கூட அதனால் முன்வைக்க
முடியவில்லை. இதைவிட வரிக்குறைப்பு, ஊழல் ஒழிப்பு, விலைக் குறைப்பு போன்ற
கோசங்களையும் முன்வைத்தது.

முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்
மறுசீரமைக்கப்படும். ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை அப்படியே ஏற்க மாட்டோம் எனக்
கூறிவந்தது.

பொருளாதார நெருக்கடி

இன்று ஒப்பந்தத்தில் ஒரு வரியைக் கூட மாற்றாமல் அதனை அப்படியே
ஏற்றுக்கொண்டு செயல்படப் போவதாக நாணய நிதியத்துக்கு உறுதி கூறியுள்ளது.
 

அத்துடன், ஊழலை ஒழிப்பது என்பது அரசாங்கத்திற்கு இலகுவானதாக இருக்கப் போவதில்லை.
எனவே பொருளாதார நெருக்கடி என்பது கூரிய கத்தி போல அரசாங்கத்தின் கழுத்தில்
தொங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த விவகாரத்தை தீர்ப்பது என்பது அநுர அரசாங்கத்திற்கு இலகுவாகக் இருக்கப் போவதில்லை – என்றுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version