நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டண பட்டியலுக்கு நேற்று (06) அங்கீகாரம் வழங்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (
Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் இன்று (07.06.2024) இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்கட்டண பட்டியலானது, இலங்கை மின்சார சபையின் சேவைகளை செயல்திறன் மிக்கதாக மாற்ற வழி வகுக்கும்.
குறைக்கப்படும் மின் கட்டணம்! அமைச்சர் அறிவிப்பு
செயல்திறன் மிக்க சேவை
மேலும் அதன் தரம், சேவைகள், வெளிப்படைத்தன்மை, தனியார் பங்கேற்பு, முதலீடுகள் மற்றும் இறுதிப் பயனரின் செலவைக் குறைப்பதற்கான சீர்திருத்தங்களுக்கும் ஏதுவாக அமையும்.
New Electricity Sector Bill was approved by the Parliament yesterday.
The approved bill will unbundle the services of CEB, paving the way for reforms to improve efficiency, quality, services, transparency, private participation, investments and reducing the cost to the end user.…
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 7, 2024
அதேவேளை, இந்த புதிய பட்டியலை நிறைவேற்றுவதற்கு ஆலோசனை, ஊக்கம் மற்றும் உதவி புரிந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்” என கூறியுள்ளார்.
ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டண விபரம் : வெளியாகிய தகவல்
இலங்கையுடனான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |