Home இலங்கை அரசியல் தமிழ் இனப்படுகொலையில் சர்வதேசத்தின் நகர்வுகள்: அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

தமிழ் இனப்படுகொலையில் சர்வதேசத்தின் நகர்வுகள்: அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

0

அண்மைய நாட்களாக தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரமானது மிகவும் பேசுபொருளாக சர்வதேச மட்டத்தில் மேலோங்கியுள்ளது.

காரணம், இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அன்றிலிருந்த அரசிலிருந்து தற்போதைய அரசு வரை சர்வதேசத்தினால் வலியுருத்தப்பட்டு வந்தது.

இருப்பினும், அப்போதிலிருந்து தற்போதைய அரசாங்கம் வரை தன் இராணுவத்தினரை காப்பாற்ற இலங்கை அரசு இனப்படுகொலை விவகாரத்தை மூடிமறைத்து வருகின்றது.

இந்தநிலையில், இதன் எதிரொலியாக சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் உந்துதலால் யுத்தத்தில் பறிபோன மக்களுக்காக ஒலிக்கும் குரல்கள் அதிகரித்துள்ளது.

உதாரணமாக கனடாவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு கனடிய அரசு எப்பொழுதும் துணையாக இருக்கும் என அறிவித்திருந்து.

இதனுடன் இந்த வருடம் நடைபெற்று முடிந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தமிழர் தரப்பை போலவே சர்வதேச மட்டத்திலும் பாரிய அளவில் பேசுபொருளாக மாறி இருந்தது.

இது தற்போது இலங்கை அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இனப்படுகொலை சூத்திரதாரிகள் சிக்குவதற்கான பெரிய வாய்பையும் ஏற்படுத்தி கொடுப்பதாகவுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச மட்டத்தில் இனப்படுகொலை விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை, இலங்கை அரசு இனப்படுகொலை விவகாரத்தில் வலியுருத்தும் விடயங்கள், இலங்கை அரசியல், தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கை மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கனநாதன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,  

 

https://www.youtube.com/embed/E7mRvkRg9_I

NO COMMENTS

Exit mobile version