Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் : புதிய வேட்பு மனுவிற்கு கிடைத்தது அனுமதி

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : புதிய வேட்பு மனுவிற்கு கிடைத்தது அனுமதி

0

அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு(local election) புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத்(Ruwan Senarat) தெரிவித்தார்.

சட்டமா அதிபர் அங்கீகாரம்

இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version