Home இந்தியா புதிய பாம்பன் பாலம்: அடுத்த ஆண்டு பாவனைக்காக…!

புதிய பாம்பன் பாலம்: அடுத்த ஆண்டு பாவனைக்காக…!

0

அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் (Pamban Bridge) கடலில் புதிய தொடருந்து பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பாக மதுரை (Madurai) கோட்ட தொடருந்து நிர்வாகம் கூறியதாவது: “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் தொடருந்து பாலம் 110 ஆண்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

துருப்பிடித்த பாலம் 

குறிப்பிட்ட கால இடை வெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது.  

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம்! 9 பேர் பலி

சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது. பாலத்தின் அபாய நிலையால் தொடருந்துகள் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன.

பராமரிப்பிற்கென தொடருந்து போக்குவரத்தை அடிக்கடி நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டது. தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்தனர்.  

கட்டுமான பணிகள்

இந்த நிலையில், நவீன வசதிகளுடன் 550 கோடி ரூபா செலவில் புதிய பாலம் கட்ட தொடருந்து வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8 கி.,மீ. நீளத்துக்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்படுகிறது.

அரசியல்மயமாக்கப்பட்ட மே தினக்கூட்டங்கள்! சுட்டிக்காட்டும் எம்.பி

நடுவிலுள்ள 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும். பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைகிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் விதமாக நடுவிலுள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்துக்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்துக்கு இணையான உயரம் ஆகும்.

நவீன வசதிகளுடன் தீவிரமாக முன்னெடுக்கப்படும் பாலத்தின் கட்டுமான பணிகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். அதாவது இந்த ஆண்டு நிறைவடைய முன்னர் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழர் தேசமா… மனித புதைகுழியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/RjLnf2VsAYk

NO COMMENTS

Exit mobile version