Home இலங்கை சமூகம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் நிறைவு

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் நிறைவு

0

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள புதிய உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இந்நடவடிக்கைகள் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றும் (19) இன்றும் (20) மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இந்த தகவல் சேகரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முதலாவது அமர்வு 

இதன்போது, முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் பயனுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குதல், அவர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்காக, இணையவழி முறை (Online) ஊடாக உரிய தகவல்களை உள்ளீடு செய்யும் வசதி இம்முறை வழங்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version