நாட்டில் கூட்டுறவு வணிகத்தை இணைத்து மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவு கைத்தொழில் மற்றும் வர்த்தக கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
ஒப்பந்தம் கைச்சாத்து
இதன் போது, 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுறவுத் தலைவர்களுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.