Home இலங்கை அரசியல் தையிட்டி விகாரை பிரச்சினை:மகாநாயக்க தேரர்களிடம் அர்ச்சுனா முன்வைத்த கோரிக்கை

தையிட்டி விகாரை பிரச்சினை:மகாநாயக்க தேரர்களிடம் அர்ச்சுனா முன்வைத்த கோரிக்கை

0

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கண்டி மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்று (21.12.2025) தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தனது சமூக வலைதளத்திலேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் மேலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கலந்துரையாடிய விடயங்கள்

தையிட்டி திஸ்ஸ விகாரையை வைத்து கொண்டு தமிழ்-சிங்கள அரசியல் வாதிகள் இரு இன மக்களையும் ஆவேசப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் வாதிகள் குறித்த விகாரையை உடைக்க வேண்டும் என கோருகின்றனர்.

சிங்கள அரசியல் வாதிகள், விகாரையை உடைத்தால் தமிழ் மக்களை கொல்வதாக கூறுகின்றனர் .இந்த திஸ்ஸ விகாரையை வைத்துக் கொண்டு இவர்கள் அரசியல் செய்கின்றனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் விகாரை காணி தொடர்பில் ஜனாதிபதிக்கு நான் காரணங்களை சுட்டிக் காட்டினேன்.ஆனால் ஒரு வருடம் கடந்து விட்டது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் மாநாயக்க தேரர்களிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று செய்தேன்.இந்த விகாரை அஸ்கிரிய பீடமோ அல்லது மல்வத்து பீடத்துக்கோ சொந்தமானதல்ல.

இது மூன்றாம் தரப்பினருக்கானதாகும்.இதில் தலையிட்டு தீர்வு தருமாறு கேட்டுக் கொணடுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version