Home இலங்கை அரசியல் புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்

புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்

0

கல்விச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அசோக ரன்வெல சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய சபாநாயகரை தெரிவு செய்யவேண்டிய நெருக்கடியில் அநுர அரசு சிக்கியுள்ளது.

அந்த வகையில் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickramaratne)பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று கூடி இறுதி முடிவு

ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழு இன்று (16ம் திகதி) கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளது.

இவர் பொலன்னறுவை(polonnaruwa) மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

புதிய சபாநாயகர் நியமனம் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு இன்று (16ம் திகதி) கூடவுள்ளது.

அசோக ரன்வலவின் கல்விச் சான்றிதழ்கள்

இதேவேளை, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின்(ashoka rangwalla) கல்விச் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version