Home சினிமா அந்த முன்னணி நடிகருடன் நான் நடிக்கவில்லை.. வெளிப்படையாக கூறிய விஜய் சேதுபதி

அந்த முன்னணி நடிகருடன் நான் நடிக்கவில்லை.. வெளிப்படையாக கூறிய விஜய் சேதுபதி

0

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார் விஜய் சேதுபதி. மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றி விஜய் சேதுபதியின் மாஸ் கம் பேக் ஆக அமைந்தது.

இதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்துள்ள படம் விடுதலை 2. இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதி ஈடுபட்டுள்ளார். நேற்று தெலுங்கு ப்ரோமோஷனில் இருந்த விஜய் சேதுபதி, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்.. ரூ.55 லட்சத்தை கைப்பற்றிய போட்டியாளர்.. யார் தெரியமா! இதோ

வெளிப்படையான பேச்சு

அப்போது “ராம் சரணின் 16வது படத்தில் நடிக்கிறீர்களா?” என விஜய் சேதுபதியிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் சேதுபதி “இல்லை” என பதிலளித்தார். பின் “ஏன் நடிக்கவில்லை” என கேட்டார்.

“முதலில் எனக்கு நேரம் இல்லை, ஆனால், நான் கதைகளை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். சில சமயம் கதைகள் நன்றாக இருக்கிறது. என்னுடைய கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை” என கூறினார் விஜய் சேதுபதி.

NO COMMENTS

Exit mobile version