Home அமெரிக்கா நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு: பொலிஸ் அதிகாரி உட்பட்ட பலர் பலி

நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு: பொலிஸ் அதிகாரி உட்பட்ட பலர் பலி

0

நியூயோர்க்கின் மத்திய மன்ஹாட்டனில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட குறைந்தது நான்கு பேர்
கொல்லப்பட்டனர்.

லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயதான சேன் தமுரா என தற்காலிகமாக அடையாளம் காணப்பட்ட
ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். 

உயிரை மாய்த்துக் கொண்ட துப்பாக்கிதாரி..

பின்னர் அவர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

மன்ஹாட்டனின் நெரிசலான பகுதியில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால், அந்தப் பகுதியில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் நியூயோர்க் பொலிஸை சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட குறைந்தது ஆறு பேர்
சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான
நிலையில் இருப்பதாகவும் ஃபொக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version