Home இலங்கை சமூகம் பட்டம் விட வேண்டாம் – நாட்டு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

பட்டம் விட வேண்டாம் – நாட்டு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வானூர்தி நிலையங்களுக்கு அருகில் பறக்க விடப்படும் பட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை வான்படை தெரிவித்துள்ளது.

வானூர்தி நிலையங்கள்

இதன் காரணமாக வானூர்தி விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை வான் படை எச்சரிக்கிறது.

இதேவேளை, வானூர்தி நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக, சர்வதேச வானூர்தி நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதற்கு தடை விதிப்பதாக வானூர்தி நிலைய மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version