Home உலகம் இஸ்ரேலிய பிரதமரை கைது செய்ய உத்தரவிடுவேன்  – அமெரிக்காவிலிருந்து பறந்த அதிரடி அறிவிப்பு

இஸ்ரேலிய பிரதமரை கைது செய்ய உத்தரவிடுவேன்  – அமெரிக்காவிலிருந்து பறந்த அதிரடி அறிவிப்பு

0

இஸ்ரேலிய பிரதமர் நியூயோர்க் நகரத்திற்கு வந்தால் கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயோர்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் சோஹ்ரான் மம்தானி ( Zohran Mamdani) தெரிவித்துள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது.

நெதன்யாகு (Benjamin Netanyahu) ஒரு போர்க்குற்றவாளி என்றும் காசா பகுதியில் இனப்படுகொலை செய்து கொண்டு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பிடியாணை

நவம்பர் 4 ஆம் திகதி நியூயோர்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது, அவர் மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு எதிரான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நகரத்திற்குள் கால் வைத்தால் அவரைக் கைது செய்ய நியூயார்க் காவல் துறைக்கு உத்தரவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிடவுள்ளதாக மம்தானி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடைமுறை சாத்தியமற்றது

அத்துடன் மம்தானியின் இந்த கருத்து உலகின் இரண்டாவது பெரிய யூதர்கள் வசிக்கும் நியூயார்க்கில் கடுமையான எதிர்வினைகளை தூண்டும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

மேலும் நெதன்யாகுவை கைது செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது கூட்டாட்சி சட்டத்தை மீறும் என்றும் சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version