Home இலங்கை அரசியல் பாதுகாப்பு பிரதியமைச்ருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நாளை சமர்ப்பிப்பு

பாதுகாப்பு பிரதியமைச்ருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நாளை சமர்ப்பிப்பு

0

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (11) திங்கட்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் உண்மைகளை மூடிமறைக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்மொழிந்துள்ளது.

 நம்பிக்கையில்லாப் பிரேரணை மகஜர்

எதிர்க்கட்சியின் சகல கட்சித் தலைவர்களும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

 இந்நிலையில் நாளைய தினம் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மகஜர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதனை கூடிய விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version