Home இலங்கை சமூகம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்: மக்களுக்கான அறிவிப்பு

நாளை முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்: மக்களுக்கான அறிவிப்பு

0

வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யப்படும் போது வழங்கப்படும் ஷொப்பின் பைகளுக்கு நாளை முதல் பணம் அறவிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

விலைப்பட்டியலில் ஷொப்பின் பைகள்

அதன்படி வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அறிவிப்பு

இந்த நிலையில் நாளை முதல் ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என ஏற்கனவே வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருந்ததாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு நாளை முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version