கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும்
குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடு ஆகும் என்று
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை
நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய
அடையாளத்துடன் கூடியதாகும்.
மரநடுகை
கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக்
குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த்தேசியத்தின்
ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும்.
தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு
இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின்
திரட்சியான ஒரு வாழ்க்கை
முறையாகும்.
தேசியச் செயற்பாடு
அந்த வகையில், கார்த்திகை மாத மரநடுகை என்பது தமிழ்த்தேசிய
நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.
எனவே தமிழ் மக்கள் கார்த்திகை
மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன்கூடிய
ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என்றும்
தெரிவித்துள்ளார்.
