Home இலங்கை சமூகம் நாட்டில் இனிமேலும் இனவாதம் இருக்கக் கூடாது: இளங்குமரன் எம்.பி

நாட்டில் இனிமேலும் இனவாதம் இருக்கக் கூடாது: இளங்குமரன் எம்.பி

0

இந்த நாட்டில் இனிமேலும் இனவாதம் இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்
நீண்ட காலம் புனரமைக்கப்படாது இருந்த ஏழாம் யுனிற் மூன்றாம் வீதியின்
ஒருகிலோமீற்றர் வீதியின் அபிவிருத்தி பணிகள் 47 மில்லியன் ரூபா செலவில்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்
போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இனவாதம்

அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்த நாட்டிலே இனி மேலும் இனவாதம் இருக்கக் கூடாது, யுத்தம் தோற்றுவிக்கப்படக்கூடாது ஊழல்களுக்கு இடமளிக்க கூடாது,  ஊழல்களுக்கு
உடந்தையாக இருக்கக் கூடாது.

புதியதோர் கலாச்சாரத்தை உருவாக்கி நல்லதொரு நாட்டை
எதிர்கால சந்ததிக்கு ஒப்படைப்பதே எமது பொறுப்பாகும்.

வெளிநாட்டு தூதுவர்கள் இப்பொழுது வருகின்றார்கள். பகை விடப்பட்ட
தொழிற்சாலைகளை உருவாக்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்
மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் துறை சார்ந்த திணைக்களங்களுடைய தலைவர்கள்
பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version