Home இலங்கை அரசியல் பிரபாகரனுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அநுர கட்சி : பகிரங்கமாக சாடும் எதிர்க்கட்சி எம்.பி

பிரபாகரனுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அநுர கட்சி : பகிரங்கமாக சாடும் எதிர்க்கட்சி எம்.பி

0

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பிரபாகரனுடனும் கூட்டணி அமைக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (20) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. 

தற்போதைய அரசாங்கம் 

குருநாகல் மாநகர சபை முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவாகியுள்ளார். 

பிரதி முதல்வராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கரண்ணாகொட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் அசாப்தீன் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துமா? அதிகாரத்துக்காக பிரபாகரனுடனும் கூட்டணியமைத்துக்கொள்ளும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது,”என அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version