Home இலங்கை அரசியல் தமிழரசு கட்சியின் பேச்சாளராக யாரும் நியமிக்கப்படவில்லை – ஞா.சிறிநேசன்

தமிழரசு கட்சியின் பேச்சாளராக யாரும் நியமிக்கப்படவில்லை – ஞா.சிறிநேசன்

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நியமனம் செய்யப்பட்டாரே தவிர இலங்கை
தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக யாரும் நியமனம் செய்யப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(21.12.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து
தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“ஊடகப் பேச்சாளர் என்ற பணி நாடாளுமன்றக் குழுவினால் தானாகத் தரப்பட்ட பணி.
கடந்த வவுனியா கூட்டத்தின் போது ஊடகங்கள் என்னையும் சந்தித்தார்கள். முன்னாள்
எம்.பியையும் சந்தித்தார்கள்.

மத்திய குழு தீர்மானம்

இதன்போதும் நான் ஊடகங்களுக்குத் தெளிவுப்படுத்தியிருந்தேன்.
ஆனால், அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதாக
எனக்குத் தெரியவில்லை.

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்
பதவி அவருக்கு வழங்கப்பட்டது உண்மை. பின்னர் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியதன் பின்னர் அது முற்றுப் பெற்றிருக்க
வேண்டும்.

ஆனால், தற்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நான் செய்கின்றேன்.
அது பற்றியே என்னால் கூற முடியும். மற்றைய விடயத்தை எமது மத்திய குழுவும்
நாடாளுமன்றக் குழுவுமே தீர்மானிக்க எடுக்க வேண்டும்” என்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version