சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு எந்த
வகையிலும் முயற்சிக்கவில்லை என முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான
ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று பூச்சிய நிலைக்கு வந்துள்ளது. கட்சி பல
கூறுகளாகப் பிளவுபட்டுள்ளது.
புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல்: சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு
புதிய நபர்களுடன் சுதந்திரக் கட்சி
கட்சியை மீள கட்டியெழுப்புவதென்பது இலகுவான விடயமாக அமையாது.அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
கிராம மட்டத்திலான மக்கள் சுதந்திரக் கட்சியுடன் உள்ளனர்.எனவே, புதிய நபர்களுடன் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன்.
எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார். 60 வயது கடந்ததும் செயற்பாட்டு அரசியலில்
இருந்து ஒதுங்குவேன் எனக் கூறினேன்.அவ்வாறு செய்தேன்.
சஜித்தின் மேதின கூட்டத்தை புறக்கணித்த இரண்டு முக்கிய புள்ளிகள்
கட்சிகளை இணைக்கும் திட்டம்
கட்சிகள் மற்றும் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே 2015 ஆம் ஆண்டில்
பொது வேட்பாளர் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தேன்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.”என்றார்.
நாட்டை வழி நடத்த தவறியவர்கள் : மேதின கூட்டத்தில் சஜித்,அநுரவை கடுமையாக விமர்சித்த மகிந்த
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |