அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இழப்பீடு
இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயல்முறைகளை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் உள்ள அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சேவகர்களுக்கு எழுத்து பூர்வமாக முறையாகத் தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் மாவட்ட அபிவிருத்தி குழுக்களில் அது தொடர்பில் முரணான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சரியான நேரத்தில் நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
