ஆப்கானிஸ்தானின் (Afghanistan) இந்து குஷ் பகுதியில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (19) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான குண்டுஸிலிருந்து 61 கிலோமீற்றர் (38 மைல்) மையப்பகுதியிலும் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்
குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த மாதம், பால்க், சமங்கன், சார்-இ-புல், பாக்லான் மற்றும் குண்டுஸ் உள்ளிட்ட வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதுடன் 956 பேர் காயமடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
ஓகஸ்ட் மாதம், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் சுமார் 4,000 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
