Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் தெரிவு குறித்து சஜித் தரப்பு எடுத்துள்ள முடிவு

உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் தெரிவு குறித்து சஜித் தரப்பு எடுத்துள்ள முடிவு

0

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் தெரிவின் போது இரகசிய வாக்கெடுப்பு நடைமுறைக்கு இணங்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நகரபிதா, தவிசாளர் போன்ற பதவித் தெரிவுகளின் போது பகிரங்கமாக கை உயர்த்தி மேற்கொள்ளப்படும் வாக்களிப்பு முறையை கோருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத

தேசிய மக்கள் சக்தி இரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த தெரிவுகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பகிரங்கமான முறையில் கை உயர்த்தி இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டுமென கட்சி உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் கட்சித் தலைமையகம் அறிவித்துள்ளது.

எந்தவொரு கட்சியினாலும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களில் இவ்வாறு வாக்கெடுப்பு மூலம் பிரதானிகள் தெரிவு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியினால் பரிந்துரை செய்யப்படும் நபர்களுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version