Home இலங்கை அரசியல் மொட்டு கட்சியை தொடர்ந்தும் ஆதரிக்க போவதில்லை! ரணில் ஆதரவு எம்.பி பகிரங்கம்

மொட்டு கட்சியை தொடர்ந்தும் ஆதரிக்க போவதில்லை! ரணில் ஆதரவு எம்.பி பகிரங்கம்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவால் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படும் நபரை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் தனக்கு இல்லையென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.   

கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.   

அதேநேரம், கட்சியின் அனைத்து தீர்மானங்களுக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென்ற நிபந்தனை யாருக்கும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

தோல்வியடைந்த திட்டங்கள்

மேலும் தெரிவித்த திலும் அமுனுகம, ”முன்னாள் அதிபர்களான கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோர் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தோல்வியடைந்திருந்தன.

அனைத்து அரச நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்தாது, அனைத்து தரப்பினரையும் அரச சேவையிலேயே வைத்துக் கொண்டு, பரீட்சையில் சித்தி பெறாதவர்களையும் அரச சேவைக்கு இணைத்துக் கொண்டதில் முன்னாள் அதிபர்கள் இரண்டு பேரினதும் திட்டங்கள் தோல்வியடைந்திருந்தன.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremasinghe) தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் வெற்றியளித்துள்ளன.

அதிபர் வேட்பாளர்

இந்த திட்டங்கள் வெற்றியளித்தால் அதனை நாம் ஆதரிக்க வேண்டும். சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு சாதாரண விடயம். யாரும் தோல்வியடைந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க போவதில்லை.

அத்துடன், எமது கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனினும், கட்சியின் அறிவுறுத்தல்களுக்கமைய நாம் செயல்பட்டு வருகிறோம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவால் யாரை நியமித்தாலும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையும் எமக்கு இல்லை. நான் இதற்கு முன்னரும் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version