எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாமை குறித்து வியூ (View) அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹேசிகா விமலரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சமூகத்தில் இருக்கக் கூடிய மக்களுடைய சிந்தனைகள் மற்றும் எண்ணப்பாங்குகள் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றால் அதனை செய்வார்களா, உடல் ரீதியாக உள ரீதியாக பெண்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்ற மனோபாவம் தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடாமைக்கு காரணம்.
அத்துடன் ஆண்கள் தான் ஆட்சி செய்வார்கள் அல்லது பலம் பெருந்தியவர்கள் என்ற ஆணாதிக்கம் எண்ணப்பாடு சமூகத்தில் காணப்படுகின்றமை பெண் வேட்பாளர்கள் முன்வராமைக்கு காரணமாக அமையலாம்.
புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கால உலகத்தில் இலங்கையை பொறுத்தவரையில் பெண்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படாமல் தடுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைமைப் பொறுப்பு திறமைகள் இருந்தால் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஓரங்கட்டப்படல், பெண்களை வெறுப்படையச் செய்தல் மற்றும் பெண்களின் மனநிலையை பாதிக்கப்படக் கூடிய விடயங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படுகின்றன.
இன்று கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தின் தலைவியாக ஒரு பெண் வரலாற்றிலே முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கையைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கியமான திருப்பு முனையாக காணப்படுகின்றது.“ என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/OzUwLFAsD-4?start=88