Home இலங்கை அரசியல் விசேட தேவையுடையோருக்கு விசேட ஏற்பாடு: தேர்தல் ஆணைக்குழு

விசேட தேவையுடையோருக்கு விசேட ஏற்பாடு: தேர்தல் ஆணைக்குழு

0

பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடத்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாத விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

விண்ணப்பங்களை பெறுவதற்கான வழிமுறை

இந்த போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும், www.election.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் உரிய தெரிவத்தாட்சி அலுவரிடம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பவர், தன்னால் கால்நடையாகவோ அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையத்திற்குச் செல் முடியாது என நிரூபிக்கக்கூடியவாறு வைத்தியரின் சான்றிதழுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version