Home உலகம் கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

கனடாவில் நோரோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு பொதுச் சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இந்த நோய் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட விசேட சிகிச்சை முறைமைகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்: வெளியாகியுள்ள தகவல்

நோரோ வைரஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் நோரோ வைரஸ் தாக்கத்தின் பாதிப்பு அதிகமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மற்றும் அல்பேர்ட்டா மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இந்திய பயணத்தை ரத்து செய்து சீனா சென்ற எலான் மஸ்க்…வெளியானது காரணம்!

நோய்த் தாக்கங்கள்

வயிற்றுவலி, வாந்தி, தசைபிடிப்பு மற்றும் வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய்த் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோவின் நோர்வால்க் பகுதியில் முதன் முறையாக இந்த வைரஸ் தாக்கம் பரவிய காரணத்தினால் நோரா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version